Monday, 19 March 2012

நீலமான் கடலையில்











நீலமான் கடலையில் கோலமிடும் மீன் இனங்கள் துள்ளுவதென்ன?  சொல்லுவதென்ன?



ஆழமாய் உன் மனதில் ஆசை வைத்த என் கனவு துள்ளுவதென்ன?  சொல்லுவதென்ன?



பச்சை மலை பூ மரத்தில் பாரிஜாதப் பூ பறித்தேன்



பெண்ணழகு கூந்தல் தன்னில் பின்னி விட சம்மதமோ?


நாணமாம் திரை எடுத்து பூவை எனும் வெண்ணிலவு துள்ளுவதென்ன? சொல்லுவதென்ன?



முத்து முத்து நீர் துளி போல் மூடி வைத்த தேன் துளிகள்
எந்த நாள் பார்ப்பதென்று ஏங்கியதோ உன் விழிகள்?



காதலோ கரை கடக்க கன்னம் ரெண்டும் பள பளக்க துள்ளுவதென்ன? சொல்லுவதென்ன?




K.J.யேசுதாஸ், P.சுசீலா

மலைநாட்டு மங்கை(1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த்திரைப்படம்),


 

Wednesday, 14 September 2011

நோக்கம்

இது தமிழ் இலக்கியம் தொடர்பான வலை. சமகால படைப்புக்கள் பற்றிய கருத்துரைகள் விமர்சனங்கள் பற்றியதாக ஆக்கங்கள் அமையும்.

குறிப்பாக ஈழத்து இலக்கியம் தொடர்பாக நான் தொண்ணூறுகளின் இறுதியிலும் இரண்டாயிரமாம் ஆண்டுகளின் ஆரம்பத்திலும் கொண்டிருந்த கருத்துக்களை மீளாய்வு செய்வதன் ஊடாக புதிய வரவுகள் தொடர்பான எனது பார்வைகளை ஆக்கங்களை முன்வைக்கிறேன். சமகால இலக்கியம் பற்றியதாகையால் அதன் விடயப்பரப்பு அரசியல் முதல் விஞ்ஞானம் ஈறாக அமையும்.